கொடநாடு வழக்கு - "கனகராஜ் மரணம் குறித்து மறுவிசாரணை"

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் விபத்தில் உயிரிழந்த‌து குறித்து மறுவிசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொடநாடு வழக்கு - கனகராஜ் மரணம் குறித்து மறுவிசாரணை
x
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் விபத்தில் உயிரிழந்த‌து குறித்து மறுவிசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனிப்படை போலீசார் உடன் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், புகார்தாரர்கள், சாட்சிகள் என அனைவரிடமும் மறுவிசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதேபோல், இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிழந்த‌து தொடர்பாக விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கனகராஜ் விபத்தில் சிக்கிய இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்யவும், அவருடைய மனைவி மற்றும் உறவினர்களிடம் மறுவிசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வாளையார் மனோஜ் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை செய்ய உள்ளனர். இந்த வழக்கில் புகார்தாரரான கொடநாடு எஸ்டேட் காவலாளியான, நேபாளத்தை கிருஷ்ண தாபாவிடம் மறுவிசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய கார் உரிமையாளர் நவ்ஷத், இடைத்தரகர் நஃபுல் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்