கிணத்துகடவில் கலை கல்லூரி ? - அமைச்சர் பதில்

கிணத்துகடவு தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
x
கிணத்துகடவில் கலை கல்லூரி ? - அமைச்சர் பதில் 

கிணத்துகடவு தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன்,கிணத்துகடவு தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ,  இந்த ஆண்டு உயர்கல்வி துறை சார்பில் 10 கலை கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகளும், கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு கல்லூரி என மொத்தமாக இந்த ஆண்டு  21 புதிய கல்லூரிகள் தொடங்கபட உள்ளதாக தெரிவித்தார்.இந்த கல்வி ஆண்டில் 21 ஆயிரத்து 601 காலி இடங்கள் உள்ளதாகவும்,25 சதவீத மாணவர்களை இந்த ஆண்டு அதிகம் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், கல்லூரி அமைக்க மாநகராட்சி என்றால் 2 ஏக்கர் நிலமும்,நகராட்சி என்றால் 3 ஏக்கர் நிலமும், கிராம பஞ்சாயத்து என்றால் 5 ஏக்கர் நிலமும் தேவை என்றும்கட்டிடம் கட்ட 12 கோடி ரூபாய் செலவாகும் என்றும் குறிப்பிட்டார்.மேலும், கிணத்துகடவு பகுதியில் கலை கல்லூரி அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்