கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்-அவருக்கு வயது 85

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்-அவருக்கு வயது 85
x
கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்-அவருக்கு வயது 85

மூச்சு திணறல் சிகிச்சைக்காக கடைசியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சையில் இருந்த புலமைப் பித்தன், உடலுறுப்புகள் செயலிழந்த நிலையில் காலமானார்.1935.ல் பிறந்த கோவையைச் சேர்ந்த ராமசாமி என்ற அவர், பாடல் எழுதுவதற்காக சென்னை வந்ததுடன், பிரபல சாந்தோம் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றி புலமைப் பித்தனாக மாறினார். எம்.ஜி.ஆரின் அன்பைபெற்றதால், தமிழக சட்டபேரவையின் மேலவையின் துணைத் தலைவர், அரசவைக் கவிஞர், அதிமுக அவைத் தலைவர் பதவிகளை அலங்கரித்துள்ளார்.நான் யார், நீ யார் பாடல் தொடங்கி, ஆயிரம் நிலவே வா, சிரித்து வாழ வேண்டும், உள்பட எம்.ஜி.ஆருக்கு பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார்.தமிழக அரசின் பெரியார் விருது பெற்ற புலமைபித்தன், 29 வயதில் திரையுலகுக்கு வந்து கமல், ரஜினி, விஜய், ஜெயம் ரவி, வடிவேலு உள்பட பல நட்சத்திரங்களுக்கும் பிரபலமான பாடல்களை எழுதிய புலமைப்பித்தனின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்