கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி - காவலாளி கிருஷ்ணதாபாவை விசாரிக்க திட்டம்
பதிவு : செப்டம்பர் 07, 2021, 07:03 PM
கொடநாடு வழக்கில் நடந்து வரும் விசாரணைக்காக எஸ்டேட் காவலாளியாக இருந்த கிருஷ்ணதாபாவை நேபாளத்தில் இருந்து அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கொடநாடு வழக்கில் நடந்து வரும் விசாரணைக்காக எஸ்டேட் காவலாளியாக இருந்த கிருஷ்ணதாபாவை நேபாளத்தில் இருந்து அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கொடநாடு வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக மேல் விசாரணை நடந்தது. இதனிடையே இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்த நிலையில் விசாரணையை ஒத்தி வைத்த தனிப்படை போலீசார், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையில் உதகை எஸ்.பி., ஆஷிஷ் ராவத், தனிப்படை தலைமை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி., சுரேஷ், ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் 6 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது சம்பவம் நடந்த நாளன்று கொடநாட்டில் பணியில் இருந்த காவலாளியான கிருஷ்ணதாபாவை நேபாளத்தில் இருந்து அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்காக மாற்று வாகனத்தில் மாற்று உடையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் வந்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது... 


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

357 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

26 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

கொடநாடு விவகாரம் - காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

9 views

சட்டத்துறையின் புதிய அறிவிப்புகள்

சட்டப்பேரவையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

10 views

"எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்" - எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சட்டபேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

8 views

அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

ஆரோவில் அருகே அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றனர்.

8 views

"1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்" - அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

53 views

குட்கா விற்பனை - ரமணா மீது குற்றப்பத்திரிகை

குட்கா முறைகேடு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்களை சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.