உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம்

வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
வரும் 10ம் தேதி வரை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும், நாளை, கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்றும், வரும் செப்டம்பர் 10 வரை, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்