17 வயது சிறுமியை கடத்தி சென்ற நபர் - போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

புதுக்கோட்டை அருகே 17 வயது சிறுமியை காதலிப்பது போல் நடித்து கடத்திச் சென்ற 23 வயது ரஞ்சித் குமார் என்ற இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை ஒரு லட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 வயது சிறுமியை கடத்தி சென்ற நபர் - போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
புதுக்கோட்டை அருகே 17 வயது சிறுமியை காதலிப்பது போல் நடித்து கடத்திச் சென்ற 23 வயது ரஞ்சித் குமார் என்ற இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை ஒரு லட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகாரின் பேரில் போலீசார் போக்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிமன்ற நீதிபதி சத்யா மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து கொள்ள முயன்றதற்காக 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரஞ்சித்குமார் திருச்சி நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்