அமமுக பிரமுகர் படுகொலை: தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது

ரிஷிவந்தியம் அருகே அமமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடுப்பட்டு வந்த குற்றவாளிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அமமுக பிரமுகர் படுகொலை: தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மணலூர்பேட்டை அருகே உள்ள G.P.தாங்கள் கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக கடந்த ஜூலை மாதம் அமமுக பிரமுகர் கோவிந்தன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதில், சேட்டு என்பவர் ஏற்கனவே காவல் துறையினரிடம் சரணடைந்த நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்