பக்தர்களை மது அருந்த வைத்து குறி சொல்லும் பூசாரி - காவல்துறை கவனிக்குமா?

ஸ்ரீபெரும்புதூர் அருகே பக்தர்களை மது அருந்த வைத்து குறி சொல்லும் சாமியாரின் விநோத செய்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
இதை நிஜமாக்குவது போல் உள்ளது, ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி கிராம பூசாரி ஒருவரின் அருள்வாக்கு ஸ்டைல். ஆந்திராவைச் சேர்ந்த மணி என்ற இந்த பூசாரி, பத்து ஆண்டுகளுக்கு முன்​பு ஆலயம் எழுப்பி குறி சொல்லி வருகிறாராம். செவ்வாய் கிழமை சென்றால் 300 ரூபாயிலும், மறுநாள் சென்றால் ஆயிரம் ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயித்து அருள் வாக்கு கூறுகிறார். 

கார் உள்ளிட்ட வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதை பின் தொடர்ந்தால், மஞ்சள் ஆடை தரித்த பெண்கள் பொங்கலிட, ஏராளமானோருக்கு நடுவே, தனக்கான பீடத்தில் அமர்ந்து பேசிகொண்டிருக்கிறார் சாமியாடி மணி.

வாழ்க்கை பிரச்சினை குறித்து அருள்வாக்கு கேட்க வந்த ஒருவருக்கு, கடைவாய் கிழியும் அளவுக்கு முழு பாட்டிலோடு மது அருந்த வைக்கும் காட்சியும், அருந்தியவர் பூசாரிக்கே விபுதியடிப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. இதனிடையே, அது மதுதானா, மதுவாக இருந்தால், இப்படி அருந்தலாமா என்ற சந்தேகம் எழலாம். ஆனால், மகுடி பாம்பு போல், சித்தரின் சிலிர்ப்பூட்டும் அருள்வாக்கில் சிந்தை மயங்கியவருக்கு சிந்திக்கத்தான் நேரமில்லை போலும்..


Next Story

மேலும் செய்திகள்