"தமிழறிஞர் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
x
வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசிய முதலமைச்சர், அயோத்திதாச பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றார். 
திராவிடன் தமிழன் என்று அயோத்திதாசர் வகுத்தபா​தையில் தான் தமிழ்நாட்டு அரசியல் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட  அவர், 
தமிழர், திராவிடர் என்ற இரண்டு சொற்கள் இல்லாமல் இங்கு யாரும் அரசியல் நடத்த முடியாது என்றார். எனவே, அயோத்திதாசரின் 175 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்