"புதிய மாவட்டங்களில் பொது சுகாதார ஆய்வகங்கள்" - கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் பொது சுகாதார ஆய்வகங்கள் படிப்படியாக அமைக்கப்பட வருவதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சுகாதாரத்துறைக்கான கொள்கை விளக்க குறிப்பில், 
தொற்று நோய்கள் வராமல் தடுத்தல், நோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் பொது சுகாதார ஆய்வகங்கள் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 32 மாவட்டங்களில் பொது சுகாதார ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதோடு, 

இவை மாவட்ட அளவில் ஏற்படுகின்ற கொள்ளைநோயை ஆய்வு செய்தல், மாதிரிகளை சேகரித்தல் மற்றும் ஆய்வு செய்தல் போன்ற பணிகளை விரைவாக மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொது சுகாதார ஆய்வகங்கள் படிப்படியாக அமைக்கப்பட வருவதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்