விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் வருடாந்திர கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது

விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் வருடாந்திர கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது
x
திண்டிவனம் புறவழிச்சாலையிலிருந்து -உளுந்துார் பேட்டை செங்குறிச்சி வரை 73.9 கிலோமீட்டர் துாரத்திற்கு விக்கிரவாண்டியிலுள்ள உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிட்  நான்கு வழிச்சாலையை  பராமரிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறது. சாலையை மேம்படுத்தும் ,
பராமரிப்பு பணிக்காக நகாய் ஆண்டுதோறும் செப்.1 ம் தேதி முதல் கட்டண உயர்வை அறிவித்து வாகன ஓட்டிகளிடம் வசூலித்து வருகின்றனர் .
இந்தாண்டு விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகனங்களுக்கு வசூலிக்க கட்டணத்தை நகாய் அறிவித்துள்ளது. அதன் கட்டண விபரம் பின்வருமாறு..


பழைய கட்டணம் வசூலிப்பு விகிதம் அடைப்பு குறிக்குள் உள்ளது .

கார்,ஜீப்,பயணிகள் வேன் ஒரு முறை பயணிக்க புதிய கட்டணம் ரூபாய் 90 (80), பலமுறை பயணிக்க ரூபாய் 135(125) மாதாந்திர கட்டணம் ரூபாய்
2660(2465). இலகு ரக வணிக வாகனத்திற்கு ஒரு முறை பயணிக்க புதிய கட்டணம் ரூபாய் 155 (145), பலமுறை பயணிக்க ரூபாய் 235(215) மாதாந்திர
கட்டணம் ரூபாய் 4650(4310).டிரக், பஸ் ஒரு முறை பயணிக்க புதிய கட்டணம் ரூபாய் 310 (285), பலமுறை பயணிக்க ரூபாய் 465(430) மாதாந்திர
கட்டணம் ரூபாய் 9305(8625).பலஅச்சு வாகனம் ஒரு முறை பயணிக்க புதிய கட்டணம் ரூபாய் 500 (460), பலமுறை பயணிக்க ரூபாய் 750(695)
மாதாந்திர கட்டணம் ரூபாய் 14950(13860). பள்ளி பேருந்துகளுக்கு கட்டணத்தில் மாற்ற மின்றி மாதாந்திர கட்டணமாக ரூபாய் 1000 மட்டில் . அதே
போன்று உள்ளூர் வாகன கட்டணத்தில் எவ்வித மாற்றமின்றி வகை ஒன்று ரூபாய் 150 , வகை இரண்டு ரூபாய் 300 என நகாய் அறிவித்துள்ளது .
புதிய கட்டண உயர்வுக்கான அறிவிப்பு நோட்டீஸ் டோல் பிளாசாவை கடக்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் வழங்கியும், டோல் பூத்துகளில் ஒட்டியும்
அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்றை முன்னிட்டு கட்டண உயர்வு இல்லாமல் 2019ம் ஆண்டு கட்டண முறையே 2020ம் ஆண்டில் வசூலித்தனர்
என்பது குறிப்பிடதக்கது .

Next Story

மேலும் செய்திகள்