"ருத்ர தாண்டவம்" படத்தை தடை செய்ய கோரிக்கை - மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக புகார்

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும் ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்ய கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்ய கோரிக்கை - மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக புகார்
x
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும் ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்ய கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. 
சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு வந்த சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் புகார்  மனு ஒன்றை அளித்தனர். அதில் கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குநர் மோகன்ஜி பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர். மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள அந்த படத்தை தடை செய்வதோடு இயக்குநர் மோகன்ஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்