உணவகங்களில் பயங்கர தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை முகப்பேரில் அடுத்தடுத்து 2 உணவகங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உணவகங்களில் பயங்கர தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
x
சென்னை முகப்பேரில் அடுத்தடுத்து 2 உணவகங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முகப்பேர் பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க உணவக ஊழியர்கள் முயன்ற நிலையில், அருகே இருந்த மற்றொரு உணவகத்திற்கும் தீ பரவியது. பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,  தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும்,  சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சோதமாகி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்