2 அடுக்குக்கு மேலான கட்டடத்தில் மின் தூக்கி கட்டாயம்- தமிழக அரசு

இரண்டு அடுக்குக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மின்தூக்கி உள்ளிட்ட வசதி கட்டாயம் என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
கட்டடங்கள், போக்குவரத்து மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுக தடையில்லா உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் வரையறுக்கிறது. இதனடிப்படையில், மின் தூக்கி, சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை, பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்