ஓபிஎஸ் மனைவி உடலுக்கு முதல்வர் அஞ்சலி - ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினார் ஸ்டாலின்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஓபிஎஸ் மனைவி உடலுக்கு முதல்வர் அஞ்சலி - ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினார் ஸ்டாலின்
x
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வந்தார். அங்கு ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறி தேற்றினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினுடன், அமைச்சர்கள், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்