மதுரை பாலம் இடிந்த விவகாரத்தில் ஆய்வுக் குழு: விபத்தின்றி பணி செய்ய அறிவுறுத்தல்-எ.வ. வேலு

மதுரை மேம்பாலம் இடிந்த விவகாரத்தை ஆய்வு செய்ய நால்வர் குழு அமைத்து உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் எ.வ.வேலு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மதுரை பாலம் இடிந்த விவகாரத்தில் ஆய்வுக் குழு: விபத்தின்றி பணி செய்ய அறிவுறுத்தல்-எ.வ. வேலு
x
மதுரை- நத்தம் இடையேயான பறக்கும் சாலைக்கான இணைப்பு பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இது தொடர்பாக அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். கடந்த ஆட்சியில் ஏற்பட்ட விபத்துகளை சுட்டிக்காட்டி, அது தொடராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 7 கிலோ மீட்டர் நீள பாலத்துக்கான பணி நடைபெறுகிறது என்றும், பளுதூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். பொறியாளர்களின் கவனக் குறைவே காரணம் என எ.வ.வேலு, திருச்சி என்.ஐ.​டி. பேராசியர் பாஸ்கர் தலைமையில் 4 பேர் கொண்ட  ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அறிக்கைபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்