ஜெ. பல்கலை - அண்ணாமலை பல்கலை உடன் இணைப்பு : சட்டதிருத்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்திருத்த மசோதா பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஜெ. பல்கலை - அண்ணாமலை பல்கலை உடன்  இணைப்பு : சட்டதிருத்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்
x
தமிழக சட்டப்பேரவையில் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்திருத்தம் இன்று காலை அறிமுகம் செய்யப்பட்டது. இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறிய அதிமுக வெளிநடப்பு செய்தது. இந்நிலையில், பிற்பகல் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் அமைச்சர்களின் பதிலுரைக்கு பின் இந்த சட்டத்திருத்தம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பேசிய பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், ஜெயலலிதா பெயரை மாற்றுவது சரியல்ல என எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, மக்கள் வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து பேசினர். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. பின்னர் மசோதா மீது பேசிய உயர்கல்வித்துறை பொன்முடி, பல்வேறு திட்டங்களின் பெயர்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் மாற்றப்பட்டதை பட்டியலிட்டார். சட்ட திருத்த மசோதாவை, சட்டமாக்க கேட்டுக்கொண்டார். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்திருத்தம் பேரவையில் ஏகமனதாக நிறைவேறியது.


Next Story

மேலும் செய்திகள்