பஞ்சமி நிலங்கள் குறித்து பேரவையில் கேள்வி: "ஆட்சியர்கள் ஆய்வு நடத்த உத்தரவு" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்

பஞ்சமி நிலங்கள் உரியவர்களிடம் இருக்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேரவையில் தெரிவித்துள்ளார்.
பஞ்சமி நிலங்கள் குறித்து பேரவையில் கேள்வி: ஆட்சியர்கள் ஆய்வு நடத்த உத்தரவு - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்
x
வருவாய் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  ஏழ்மையினாலும், அறியாமையினாலும், பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறினார். 
இதற்கு பதிலளித்துப் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 296 ஏக்கர் நிலம் பட்டியலின மக்களுக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது என்றார்.  கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர்களிடம் உள்ளதா அல்லது தனியார் ஆக்கிரமிப்பு மேற்கொண்டு உள்ளனரா என்பது மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் என்றார். அறிக்கையின் அடிப்படையில் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்