"காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வரவேண்டாம்" - அரசு சார்பில் அறிவுறுத்தல்

காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வரவேண்டாம் - அரசு சார்பில் அறிவுறுத்தல்
x
நாளை 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதன்படி, பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கட்டாயம் முதல் டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும், பள்ளியினுள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் யாருக்காவது கொரோனா அறிகுறிகளோ அல்லது காய்ச்சலோ இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் அறிகுறி இருப்பவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்