நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் நிகழாண்டில் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.
நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு
x
தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கத்துடன், தாம்பரம், அனாகாபுத்தூர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் எல்லாம் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் நேரு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்