"பயப்படாமல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைய்யுங்கள்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்கள் நலன் முக்கியம் என்பதால் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பயப்படாமல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைய்யுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்
x
மாணவர்கள் நலன் முக்கியம் என்பதால் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பெற்றோர் பயப்படாமல் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், மாணவர்களை பாதுகாப்பது அரசின் கடமை என்று தெரிவித்தார். மேலும், தடுப்பூசி செலுத்தாத ஒரு ஆசிரியர் கூட பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் அமைச்சர் உறுதியாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்