நாள்தோறும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் நாள்தோறும் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
x
தமிழகத்தில் நாள்தோறும் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சி.வி.கணேசன் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாவட்டங்களில் கூடுதல் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். கடந்த 10 நாட்களாக, தினம்தோறும் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், மலைவாழ் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்