ஒரகடம் சிப்காட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ உபகரண தொழில் பூங்கா உருவாக்கப்படும்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ உபகரண தொழில் பூங்கா உருவாக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரகடம் சிப்காட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ உபகரண தொழில் பூங்கா உருவாக்கப்படும்
x
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் தோல் பொருள் பூங்கா ஏற்படுத்துப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஒசூரில் உள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம்-வடகால் சிப்காட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பிலும், 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 50 ஆயிரம் சதுர அடியில் ஆயத்த தொழிற்கூட வசதிகள் அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கனகரக பளுதூக்கிகள், கனரக இயந்திரங்களை நகர்த்தும் வசதிகொண்ட எடை மேடை மற்றும் 

தொலைத்தொடர்பு வசதிகளுடன் இத்தொழிற்கூடங்கள் அமைக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ உபகரண தொழில் பூங்கா உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்