"குட்கா பதுக்கல், கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்" - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குட்கா பதுக்கல், கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
x
சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்குகளில் 203 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர்களிடம் இருந்து  10ஆயிரத்து 511 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 840 கிலோ மாவா, 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்துதல் பதுக்குதல் எதிராக நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்