10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 64 வயது காவலாளி கைது
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒருவர் சென்னை வேப்பேரி பகுதிக்கு புதிதாக குடிபெயந்துள்ளார்.
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒருவர் சென்னை வேப்பேரி பகுதிக்கு புதிதாக குடிபெயந்துள்ளார். அப்போது அங்கு வாட்ச்மேனாக 40 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 64 வயதான மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்து மாறி மற்றொரு பகுதிக்கு குடிபெயர்ந்த ஐ.டி ஊழியர், மோகனை தனது வீட்டுக்கு வந்து சிறு சிறு பணிகளை செய்யுமாறு கேட்டுள்ளார். அதனடிப்படையில் அங்கு வந்து பணியாற்றி வந்த மோகன், ஐ.டி ஊழியரின் 10 வயது மகளிடம் வீட்டில் ஆளில்லாதபோது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் மோகன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
Next Story