"செப்.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு"; "வழிபாட்டுத் தலங்கள் - கட்டுப்பாடு தொடரும்" - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் திட்டமிடப்பட்ட படி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
x
தமிழகத்தில் திட்டமிடப்பட்ட படி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பார்க்கலாம்.பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள், கொரோனா கட்டுப்பாடுகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
இந்தக் கூட்டத்தில், வரும் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திட்டமிட்டபடி திறக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி இல்லை எனவும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்துள்ள தமிழக அரசு, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்