தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளுகுக் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் சில கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தவாறு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும், திருவிழாக்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையும் தொடரும். அதே நேரத்தில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10,11 மற்றும் 12 வகுப்புகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தொழில் வர்த்தக நிறுவனத்தினர், வங்கி , அரசு பணியாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மருத்துவ துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story