மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம்: புதுச்சேரி சட்ட பேரவையில் நிறைவேறியது

கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம்: புதுச்சேரி சட்ட பேரவையில் நிறைவேறியது
x
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது, மூன்றாவது நாளான இன்று, பட்ஜெட் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது, அப்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தீர்மானம் கொண்டுவரப்பட்டது, முதலமைச்சர் ரங்கசாமி முன்மொழிந்த தீர்மானத்தில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அணை கட்டினால் காரைக்காலுக்கு வர வேண்டிய 7 டி.எம் சி நீர் கிடைக்காது என முதலமைச்சர் கூறினார், மேலும் டெல்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி நீர் மேலான்மை கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கூடாது எனவும் முதலமைச்சர் கேட்டுகொண்டார், இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி முன் மொழிந்த  தீர்மானம், அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு விவாதமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்