அண்டை மாநிலங்களில் அதிகமாகும் கொரோனா பரவல் - உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

ஆந்திரா மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எல்லை கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
x
ஆந்திரா மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எல்லை கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற ஆலோசனை கூட்டத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்படுவதால் மாணவர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கோவை, தேனி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும், கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்