மக்களை தேடி மருத்துவ திட்டம்: பயனாளிகளின் வீட்டிற்கு சென்ற அமைச்சர்

ஒசூர் அருகே மக்களை தேடி மருந்து திட்டம் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியம், தெலுங்கு மொழியில் பேசி மருந்துகளை வழங்கினார்.
x
ஏழை எளியவர்களும் மருத்துவ பலன் அடையும் வகையில் அரசால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம், மக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சூளகிரியில் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியம் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று  அரசின் மருத்துவ திட்டத்தை எடுத்துரைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்