கொடூரமாக தாக்கிய தாய் - கள்ள காதலனுக்கு வீடியோ அனுப்பியதாக தகவல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெற்ற குழந்தை மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட பெண், கள்ளக்காதலனுக்கு அனுப்பவே குழந்தையை தாக்கி வீடியோ பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெற்ற குழந்தை மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட பெண், கள்ளக்காதலனுக்கு அனுப்பவே குழந்தையை தாக்கி வீடியோ பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தாய் துளசி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆந்திராவில் இருந்த அவரை கைது செய்த போலீசார், சத்தியமங்கலம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கள்ளக்காதலனுக்கு அனுப்புவதற்காகவே குழந்தையை தாக்கி வீடியோ பதிவு செய்ததாக துளசி வாக்குமூலம் அளித்துள்ளார்.
Next Story