தனியார் அனல்மின் நிலைய தீ விபத்து - அமைச்சர் சி.வி கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல்

அத்திப்பட்டு தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்தவர்களை தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி கணேசன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
x
அத்திப்பட்டு தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்தவர்களை தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி கணேசன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் கோபிநாத், வேல்முருகன், ராஜேஷ் என மூவரையும் அமைச்சர் சி.வி கணேசன், திருவெற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மூவருக்கும் இழப்பீடு வழங்குவது குறித்து முதல்வரிடம் பேச உள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார். Next Story

மேலும் செய்திகள்