"வைகைப்புயல் கரையை கடக்கவில்லை..மையம் கொண்டுள்ளது" - நகைச்சுவை நடிகர் முத்துக்காளை

24-ஆம் புலிகேசி படப்பிரச்சினை முடிவுக்கு வந்ததையடுத்து, தமிழ் சினிமாவில் மீண்டும் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார் நடிகர் வடிவேலு..
x
24-ஆம் புலிகேசி படப்பிரச்சினை முடிவுக்கு வந்ததையடுத்து, தமிழ் சினிமாவில் மீண்டும் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார் நடிகர் வடிவேலு...தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. 
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது தனித்துவமான நகைச்சுவையால் வடிவேலு கவர்ந்திருக்கிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்காதது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமளித்தது. இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், இதன் இரண்டாம் பாகமாக வடிவேலு நடிப்பில் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி திரைப்படம் தொடங்கப்பட்டது. ஆனால், சில கருத்து வேறுபாடுகால்
படம் பாதியிலேயே நின்றுபோனது. தொடர்ந்து, திரைப்படங்களில்
நடிக்க முடியாத சூழலும் உருவானது. இந்த சூழலில், வடிவேலு விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்துவந்ததை அடுத்து, இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதால், லைகா தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கவுள்ளதாக வடிவேலு அறிவித்துள்ளார்.
அண்மையில், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததனால், தனக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் சினிமாவில் தோன்றப்போவது முதன் முதலில் வாய்ப்புத் தேடும்போது ஏற்பட்ட உணர்வை திரும்ப அளித்திருப்பதாகவும் வடிவேலு மனம் திறந்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்