போலி சான்றிதழ் - அதிகாரிகள் மீது நடவடிக்கை

போலிச் சான்றிதழ்களை சரிபார்க்காமல், பணி நியமனம் வழங்கிய போக்குவரத்து கழக அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
போலி சான்றிதழ் - அதிகாரிகள் மீது நடவடிக்கை
x
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் போலி சான்றிதழ் மூலம் ஓட்டுனராக பணியாற்றிய சீனிவாசன், என்பவர் 2003ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், பலர் மீது இதே குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், தன் மீது மட்டும் பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதார‌ர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும், போலி சான்றிதழ் அளித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்