பல திரைப்படங்களை தயாரித்த 2டி நிறுவனம் - போலி மின்னஞ்சல் உருவாக்கி மோசடி

நடிகர் சூர்யாவின் பட தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, இணையதளத்தில் மோசடியை அரங்கேற்றி வருகிறது, ஒரு கும்பல்.
பல திரைப்படங்களை தயாரித்த 2டி நிறுவனம் - போலி மின்னஞ்சல் உருவாக்கி மோசடி
x
நடிகர் சூர்யாவின் பட தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, இணையதளத்தில் மோசடியை அரங்கேற்றி வருகிறது, ஒரு கும்பல்.இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சூர்யா நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோலோச்சி வரும் சூர்யா, 2டி நிறுவனம் மூலம் பட தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். தியா, தேவ் என்ற தன் பிள்ளைகளின் முதல் பெயரை பயன்படுத்தி 2டி என்ற நிறுவனத்தை 2013ல் உருவாக்கினார் நடிகர் சூர்யா.மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான How old Are You என்ற படத்தின் ரீமேக் ஆக வந்த 36 வயதினிலே படம் ஜோதிகாவுக்கு ரீ என்ட்ரியாக கவனம்  கொடுத்தது... அதேநேரம் 2டி நிறுவனத்தின் முதல் படம் என்பதால் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து 2டி நிறுவன தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க 2, நடிகர் சூர்யா நடித்த 24, நடிகை ஜோதிகா நடித்த ஜாக்பாட், மகளிர் மட்டும், கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்து படங்கள் வெளிவந்தன. இந்த சூழலில் தான் கொரோனாவால் திரையரங்குகள் முடங்கிய போதிலும், ஓடிடி தளத்தில் பொன் மகள் வந்தாள், சூரரைப் போற்று படங்கள் வெளியாகின. இதனையும் 2டி நிறுவனமே தயாரித்தது. 


Next Story

மேலும் செய்திகள்