"இலங்கைத் தமிழர் முகாம் பெயர் மாற்றம்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என்றழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
x
இலங்கை அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என்றழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன், இலங்கை அகதிகள் நலனுக்காகவும், வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை பாராட்டி பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர் பேசியது போலவே தானும் நேற்றைய தினம் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்றே குறிப்பிட்டதாகவும், இன்று முதல் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் எனவும், அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல எனவும் அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்

  Next Story

மேலும் செய்திகள்