"இலங்கை தமிழர்களுக்கு வீடுகட்டும் திட்டம்" - முதலமைச்சருக்கு வைகோ பாராட்டு

முகாம் வாழ் இலங்கைத் தமிழர் நலனுக்கு 317 கோடி ரூபாயில் நலத்திட்டம் அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு வீடுகட்டும் திட்டம் - முதலமைச்சருக்கு வைகோ பாராட்டு
x
 முகாமில் உள்ளோரின் கண்ணீரைத் துடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசை பாராட்டுவதாக வைகோ கூறியுள்ளார். அகதிகளில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வும் நடப்பதாக கூறியுள்ள வைகோ, இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார். ஈழ தமிழர்கள், நிம்மதியாக வாழ, இலங்கை செல்ல விரும்புவோருக்கு, அந்த வாய்ப்பை ஏற்படுத்தவும் கனிவுடன் கேட்பதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்