பெற்ற குழந்தைகளை பணத்திற்கு விற்ற தாய் - மீட்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

நெல்லையில் குழந்தைகளை விற்பனை செய்த தாய், இடைத்தரகராக செயல்பட்டவர்கள் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெற்ற குழந்தைகளை பணத்திற்கு விற்ற தாய் - மீட்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு
x
நெல்லையில் குழந்தைகளை விற்பனை செய்த தாய், இடைத்தரகராக செயல்பட்டவர்கள் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருப்பூரை சேர்ந்த தேவி என்ற பெண்ணுக்கும், ராஜேஷ்குமாருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் தன்ஷியா என்ற குழந்தை உள்ள நிலையில் மீண்டும் கருவுற்றார் தேவி. இந்த சூழலில் கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்தனர். இதையடுத்து தன் மகளுடன் நெல்லைக்கு வந்த தேவி, முக்கூடல் அருகே உள்ள மயிலப்பபுரத்தில் தங்கி உள்ளார். அப்போது தனக்கு பிரசவம் பார்க்க கூட கையில் பணமில்லை என்பதால் தன் மூத்த மகள் தன்ஷியாவை விற்க திட்டமிட்டுள்ளார். இதற்கு அவருக்கு அடைக்கலம் கொடுத்த வியாசம்மாள் மேரி உதவிக்கு வரவே, நெல்லையை சேர்ந்த தம்பதியரிடம் குழந்தையை விற்றுள்ளார் தேவி.கடந்த மார்ச் மாதமே தன் மகளை 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார் தேவி. இந்த நிலையில் வயிற்றில் இருக்கும் அடுத்த குழந்தைக்கும் அப்போதே விலை பேசியிருக்கிறார். எந்த குழந்தையாக இருந்தாலும் வாங்கிக் கொள்கிறோம் என இடைத்தரகரான மார்கரேட் தீபா கூறவே, அன்றிலிருந்து மருந்து, மாத்திரை உள்ளிட்ட அத்தனை செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 
 
Next Story

மேலும் செய்திகள்