நடிகர் சிம்பு மீதான ரெட் கார்டு நீக்கம் - திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

நடிகர் சிம்பு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடையை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.
x
நடிகர் சிலம்பரசன் தான் ஒப்பந்தம் மேற்கொண்ட படங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என தயாரிப்பாளர்கள் அளித்த புகாரை அடுத்து,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு எதிராக ரெட் கார்டு தடை விதித்த‌து. இதனையடுத்து சிம்புவின் படத்திற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி ஒத்துழைப்பு அளிக்காது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதையடுத்து சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு பெப்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்