லிங்கத்தின் மீது பட்ட சூரிய ஒளி - பொன்னொளியால் மின்னிய லிங்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி இன்று நிகழ்ந்தது.
x
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த அபூர்வ நிகழ்வு நடைபெறும். அதன்படி, இன்று காலை சூரிய ஒளி பட்டு லிங்கம் பொன்னொளியால் மின்னியது. இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது. இந்த காட்சியைக் காண கொரோனோ விதிமுறைகள் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு அதிகமாக வரவில்லை. இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்