பொறியியல் - ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் - ரேண்டம் எண் வெளியீடு
x
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தர வரிசையில் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இருந்தால், தர வரிசையில் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்ற குழப்பத்தை தீர்க்க ரேண்டம் எண் பயன்படுத்தப்படுகிறது.  அந்த வகையில் மாணவர்களுக்கான ரேண்டம் எண்களை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 96 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவு செய்துள்ள இணைய பக்கத்தில், மாணவர்கள் ரேண்டம் எண்களை தெரிந்துகொள்ளலாம் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவு கலந்தாய்வை செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்