9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் - அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பாஜக மாநில நிர்வாகிகளும், அனைத்து மாவட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், அடுத்த கட்ட திட்டமிடல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
Next Story
