ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள் - கொலையா? தற்கொலையா?
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வத்தகவுண்டன்வலசு கிராமத்தில் இன்று அதிகாலை மக்காளசோள தட்டை தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு துறைக்கு தகவல் வந்துள்ளது. அங்கு விரைந்த வீரர்கள், தீயை அணைக்க முற்பட்ட போது, தட்டைக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் கிடந்துள்ளன. கடன் பிரச்சினையால் குடும்பத்தினர் தற்கொலையா அல்லது யாரேனும் கொலை செய்து தீ வைத்து எரித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
Next Story
