"கோவை விமான நிலைய விரிவாக்க பணி காலதாமதம்" - வானதி சீனிவாசன்

நிதி நிலை அறிக்கையில், கோவை விமானநிலைய விரிவாக்கம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலைய விரிவாக்க பணி காலதாமதம் -  வானதி சீனிவாசன்
x
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக, நிலம் கையகப்படுத்தப்படும் விவசாயிகளுடன் கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுபினர் வானதி சீனிவாசன்  கலந்துரையாடினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியவர், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சி கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று  வந்தாலும் அது முழுமை அடையாமல் இருப்பதாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்