கொரோனா தடுப்பூசி : பின்தங்கியுள்ள மாவட்டங்கள்

கொரோனா தடுப்பூசி போட முன் வாருங்கள் என தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், தடுப்பூசி போடுவதில் பின் தங்கியுள்ள மாவட்டங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்...
x
தடுப்பூசி செலுத்துவதில் கடைசி இடத்தில் உள்ள பெரம்பலுரில் செவ்வாய் வரையில் மொத்தம் 2.08 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. 37ஆவது இடத்தில் உள்ள அரியலூரில் 2.24 லட்சம் டோஸ்களும், 36ஆவது இடத்தில் உள்ள ராணிப்பேட்டையில் 3.03 லட்சம் டோஸ்களும், 35ஆவது இடத்தில் உள்ள திருப்பத்தூரில் 3.41 லட்சம் டோஸ்களும், 34ஆவது இடத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் 3.58 லட்சம் டோஸ்களும் அளிக்கப்பட்டுள்ளன.

33ஆவது இடத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் 3.67 லட்சம் டோஸ்களும், 32ஆவது இடத்தில் உள்ள கரூரில் 3.69 லட்சம் டோஸ்களும், 31ஆவது இடத்தில் உள்ள தென்காசியில் 3.82 லட்சம் டோஸ்களும், 30ஆவது இடத்தில் உள்ள தேனியில் 3.83 லட்சம் டோஸ்களும், 29ஆவது இடத்தில் உள்ள திருவாரூரில் 3.9 லட்சம் டோஸ்களும், 28ஆவது இடத்தில் உள்ள சிவகங்கையில் 4.33 லட்சம் டோஸ்களும் தடுப்பூசி மொத்தமாக போடப்பட்டுள்ளன.

முதல் டோஸ் தடுப்பூசிகளின் அளவை விட மிகக் குறைவான அளவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியலில் திருவண்ணாமலை முதல் இடத்தில் உள்ளது. இங்கு  முதல் டோஸ் போடப்பட்ட 6.27 லட்சம் பேரில்12.6 சதவீதத்தினருக்கும் மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் முதல் டோஸ் போடப்பட்ட 3.43 லட்சம் பேரில் 13.65 சதவீதத்தினருக்கும் மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் முதல் டோஸ் போடப்பட்ட 3.21 லட்சம் பேரில்14.45 சதவீதத்தினருக்கும் மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் முதல் டோஸ் போடப்பட்ட 4.52 லட்சம் பேரில்14.75 சதவீதத்தினருக்கும் மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டிணத்தில் முதல் டோஸ் போடப்பட்ட 4.12 லட்சம் பேரில்14.78 சதவீதத்தினருக்கும் மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் முதல் டோஸ் போடப்பட்ட 3.10 லட்சம் பேரில்15.33 சதவீதத்தினருக்கும் மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் முதல் டோஸ் போடப்பட்ட 3.75 லட்சம் பேரில்15.61 சதவீதத்தினருக்கும் மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் முதல் டோஸ் போடப்பட்ட 4.47 லட்சம் பேரில்16.13 சதவீதத்தினருக்கும் மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் முதல் டோஸ் போடப்பட்ட 4.02 லட்சம் பேரில்16.28 சதவீதத்தினருக்கும் மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தேனியில் முதல் டோஸ் போடப்பட்ட 3.29 லட்சம் பேரில்16.40 சதவீதத்தினருக்கும் மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் மாநில அளவில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஆனால் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களின் நிலைமையோ தலைகீழாக உள்ளது.

சென்னையில் மொத்தம் 47.45 லட்சம் டோஸ் தடுப்பூசி இதுவரை அளிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் 34.67 லட்சம் பேருக்கும், இரண்டாவது டோஸ் 12.78 லட்சம் பேருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் மொத்தம் 9.40 லட்சம் டோஸ்ட்கள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் 7.40 லட்சம் பேருக்கும், இரண்டாவது டோஸ் 1.99 லட்சம் பேருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் மொத்தம் 3.58 லட்சம் டோஸ்ட்கள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் 3.10 லட்சம் பேருக்கும், இரண்டாவது டோஸ் 4.76 லட்சம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. திருவள்ளூரில் மொத்தம் 9.09 லட்சம் டோஸ்ட்கள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் 7.39 லட்சம் பேருக்கும், இரண்டாவது டோஸ் 1.70 லட்சம் பேருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்