மதுரை ஆதீனம் மறைவிற்கு இரங்கல்.. கைலாசா நாட்டில் அரை கம்பத்தில் கொடி

மதுரை ஆதீனம் மறைவிற்கு இரங்கல்.. கைலாசா நாட்டில் அரை கம்பத்தில் கொடி
மதுரை ஆதீனம் மறைவிற்கு இரங்கல்.. கைலாசா நாட்டில் அரை கம்பத்தில் கொடி
x
மதுரை ஆதீனம் மறைவிற்கு இரங்கல்.. கைலாசா நாட்டில் அரை கம்பத்தில் கொடி 

மதுரை ஆதீனம் மறைவுக்கு கைலாசா நாட்டில் 13 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என நித்தியானந்தா அறிவித்துள்ளார்.மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உயிரிழந்த நிலையில் நித்தியானந்தாவும் இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அருணகிரிநாதர் மறைவை முன்னிட்டு கைலாசா நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், 13 நாட்கள் கைலாசா நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம் மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக தன்னை சித்தரித்து போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ள அவர், மடத்தில் இனி சடங்குகள், பூஜைகள் செய்யும் அதிகாரம் தனக்கே இருப்பதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே அவர் ஆதீனத்தில் இருந்து நீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட நிலையில் இப்போது உரிமை கோரி வரும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.... 

Next Story

மேலும் செய்திகள்