கணவனை கொடூரமாக வெட்டிக் கொன்ற மனைவி - அரிவாள்மனையால் வெட்டிக் கொன்ற கொடூரம்

காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு கட்டிய கணவனை கொன்று எரித்த மனைவி14 நாட்கள் கழித்து நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கணவனை கொடூரமாக வெட்டிக் கொன்ற மனைவி - அரிவாள்மனையால் வெட்டிக் கொன்ற கொடூரம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஆதனஞ்சேரி, திருமலை நகர் பகுதியில் வசித்து வந்தவர் தங்கவேல். இவரின் மனைவி விமலாராணி. இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார். 

44 வயதான தங்கவேல், ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக வீடு கட்டி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தங்கவேலுக்கு வினை வேறு விதமாக வந்து சேர்ந்தது. 

தங்கவேலின் சகோதரரான சக்திவேல், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்கவேலுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரின் செல்போனை எடுத்து பேசிய விமலாராணி, பல்வேறு காரணங்களை சொல்லி வந்ததோடு தங்கவேலிடம் பேச முடியாத சூழல் ஏற்பட்டது. அதேநேரம் வீடும் பூட்டிய நிலையில் இருக்கவே, தன் மகனை குடும்பத்தோடு காணவில்லை என தங்கவேலின் தந்தை மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீரென காவல் நிலையத்தில் தன் மகனுடன் சரணடைந்தார் விமலாராணி. கணவர் எங்கே என்ற கேள்வி வந்த போது அவரை கடந்த மாதம் 28ஆம் தேதியே கொன்று விட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விமலாராணிக்கும் சேலத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த விமலாராணிக்கு திருமணத்திற்கு முன்பாகவே ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் தங்கவேலை திருமணம் செய்யும் சூழல் வரவே, அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் விமலாராணி. 

ஆனாலும் கூட, தன் காதலனுடன் நெருங்கி பழகி வந்த விமலாராணி, ஒரு கட்டத்தில் கணவரை இடையூறு என நினைத்துள்ளார். அரசல், புரசலாக வந்த பேச்சுகளை கணவர் கண்டிக்கவே ஆத்திரமடைந்த அவர், கணவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். இதனிடையே கடந்த 28ஆம் தேதி கணவன், மனைவிக்குள் சண்டை வந்த போது வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து கணவரை கொடூரமாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். பின்னர் சடலத்தை பெட்ரூமில் மறைத்து வைத்துள்ளார்.

பின்னர் தன் கள்ளக்காதலன் ராஜாவை வரவைத்து, அவரின் உதவியுடன் சடலத்தை எடுத்துச் சென்று அந்த பகுதியில் உள்ள ஏரியில் வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தார் விமலாராணி. அவர் சொன்ன தகவலின் பேரில் விமலாராணியை கைது செய்த போலீசார், ஏரியில் சடலத்தை மீட்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளனர். அதேநேரம் மாயமான கள்ளக்காதலனை தேடும் பணியும் நடந்து வருகிறது.

கை நிறைய சம்பாதிக்கும் கணவன், விடலை வயதில் மகன் என இருந்த போதிலும் தவறான பழக்கம் ஒரு குடும்பத்தை சிதைத்து போட்டது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்