9-12 வகுப்புகள் தொடக்கம்: "வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 50 விழுக்காடு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க தயாராகி வருவதாக தெரிவித்தார். இதற்காக, ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றங்கள் செய்து ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் எனவும், சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.
Next Story