ராஜேந்திர சோழன் பிறந்த நாள் - அரசு விழா

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவானது அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ராஜேந்திர சோழன் பிறந்த நாள் - அரசு விழா
x
கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட  பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும்.


அண்மையில், இதை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.


அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது  அப்பகுதிவாழ் மக்களால்  வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.


மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இவ்விழாவை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதி மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.


இக்கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக முதல்வர், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.


கொரோனா பரவல் காரணமாக, வரும் ஆண்டு முதல் இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.  




Next Story

மேலும் செய்திகள்