லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இடையூறு: அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் மீது வழக்கு - குனியமுத்தூர் போலீசார் நடவடிக்கை

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம் முன்பு திரண்ட 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட அதிமுகவினர் 520 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இடையூறு: அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் மீது வழக்கு - குனியமுத்தூர் போலீசார் நடவடிக்கை
x
கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில், வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அங்கு திரண்ட அதிமுகவினர், இருப்புத் தடுப்புகளை தூக்கி வீசினர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுகவினர் சாலையில் நின்றனர். இந்த சம்பவத்தில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, கொரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், தாமோதரன், சூலூர் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் உள்பட 520 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்